யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை


புதுமுகங்கள் நாகராஜ், ப்ரியா மேனன் நாயக, நாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் சிங்கம்புலி, சுப்புராஜ், நெல்லை சிவா, தென்னவன், ஹலோ கந்தசாமி, வெங்கல்ராஜ், போண்டாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நகைச்சுவை தூக்கலான இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சுவாமிராஜ் இயக்குகிறார். ஆதிஷ் உத்திரியன் இசையமைக்கிறார். ஜென்மப்பகை கொண்ட இரண்டு ஊர் மக்கள் அந்த ஊர்களின் ஒரு காதல் ஜோடியை எதிர்க்கின்றனர். சிங்கம்புலி அவர்களைச் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார். காதல் வென்றதா, மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டார்களா என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறது இப்படம். சொம்பு பத்திரமுங்கோவ்!

அரவிந்த்

© TamilOnline.com