இங்கிலீஷ் படம்
நாயகன், வில்லன் யாருமில்லாமல் கதையையே நாயகனாக நம்பி உருவாகும் படம் இங்கிலீஷ் படம். இதில் ராம்கி, சஞ்சீவ், மீனாட்சி, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எம்.சி. ரிகோ இசையமைக்கிறார். அறிமுக இயக்குநர் குமரேஷ் குமார் இயக்குகிறார். "இங்கிலீஷ் படம் ஒரு காமெடி த்ரில்லராக வளர்ந்துவருகிறது. நிச்சயம் நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றமாட்டோம்" என்கிறார் குமரேஷ். நடிகர் ராம்கி, "இப்படம் என்னை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோகக் கூடிய படமாக அமையும்" என்கிறார். அட, தமிழில் ஒரு இங்கிலீஷ் படம்!அரவிந்த்

© TamilOnline.com