இந்திய வங்கிகளில் ஓய்வூதியம் பெறுபவர்கள் தமது உயிர்ச்சான்றிதழை (Life certificate) நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, இதனை இந்திய தூதரகத்தில் பெறுவது வழக்கம். அமெரிக்காவிலுள்ள பாரதீய ஸ்டேட் வங்கிக் கிளைகளுக்கும் இச்சான்றிதழ்களை வழங்க அனுமதி உள்ளது. SBI வழங்கும் உயிர்ச் சான்றிதழைப் பிற அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளும், கருவூலங்களும் ஏற்கின்றன.
ஓய்வூதியம் பெறுவோர், முறையான அடையாள அட்டையுடன் வந்து 10 டாலர் கட்டணம் செலுத்திச் சான்றிதழ் பெறலாம். சான்றிதழில் PPO எண்ணோ, வங்கிக்கணக்கு எண்ணோ, குறிப்பிட வேண்டுவோர் அதற்கான ஆதாரத்தைக் கொண்டு வரவேண்டும். "வடகலிஃபோர்னியாவின், சான் ஹோஸே மற்றும் ஃப்ரீமான்ட் நகர SBI கிளைகளில் விரைந்து சான்றிதழ் பெற உதவுவோர் உள்ளனர். இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்கிறார் சான் ஹோஸே கிளை மேலாளர் T.V. அவினாஷ்குமார். அமெரிக்காவின் பிற பகுதிகளில் வசிப்போர், அருகிலுள்ள SBI கிளையை அணுகவும்.
செய்திக்குறிப்பிலிருந்து தமிழில்: மீனாட்சி கணபதி |