கர்நாட்டிக் ப்ரீமியர் லீக்: சங்கீத சாம்ராட் போட்டி
சங்கீத் சாம்ராட்-கர்நாடிக் ப்ரீமியர் லீக் 2015 போட்டி சிறப்பாக நடந்தேறியது. 'ரேடியன்ஸ் ரியல்டி' வழங்கிய இந்நிகழ்ச்சி அபயம் க்ரியேஷன்ஸின் கண்ணன் ஐயர், சுபாஷிணி ஆகியோர் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியுடன் இணந்து தயாரித்திருந்தனர். கர்நாடக இசைக்கலைஞர் K.N. சசிகிரண் கருத்தாக்கத்தில், க்ளீவ்லாண்ட் ஆராதனை கழகத்தின் V.V. சுந்தரம் அவர்களின் ஒத்துழைப்போடு இவ்வுலகளாவிய போட்டி வடிவமைக்கப்பட்டது.

CAMAGA (அட்லாண்டா), GLAC (மிச்சிகன்), iCarnatica (சிகாகோ), டெலவர் ஹிந்து கோவில், வேதா டெம்பிள் (சியாட்டில்), HECSAPDX (போர்ட்லாண்ட்), மின்னசோட்டா ஹிந்துக் கோவில், அகாடமி ஆஃப் இண்டியன் கல்ச்சர் (சான் ஹோஸே), கர்நாட்டிகா ஆர்க்கைவல் சென்டர் (டெக்சஸ்) ஆகிய அமைப்புக்களின் ஆதரவில் முதல்சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

போட்டியின் முதல் பதிப்பு, அமெரிக்கா முழுவதிலுமிருந்து இளம் பாடகர்களை ஈர்த்தது. செப். 7 முதல் அக். 4 வரை நடைபெற்ற முதல்சுற்றுப் போட்டிகளில் 1200 பேர், 5 முதல் 30 வயதுவரை உள்ளோர் பங்கேற்றனர். சங்கீத் பாலசாம்ராட் (12 வயதுக்குட்பட்டோர்), சங்கீத் யுவசாம்ராட் ஜூனியர் (13-19 வயது), சங்கீத் யுவசாம்ராட் சீனியர் (20-30 வயது), மற்றும் கர்நாடிக் ப்ரீமியர் லீக் ஆகிய நான்கு பிரிவுகளில் சாம்ராட்கள் தெரிவு செய்யப்பட்டனர். வாய்ப்பாட்டு, கருவியிசை, தாளக்கருவிகள் மற்றும் குழுப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மேடைக்கச்சேரி செய்வோர், செய்யாதவர் என்ற துணைப்பிரிவுகளும் இருந்தன. வித்வான்கள் நாகை முரளீதரன், திருவாரூர் வைத்தியநாதன், சித்திரவீணை N. ரவிகிரண், K.N.சசிகிரண், சித்திரவீணை P.கணேஷ் ஆகியோர் நீதிபதிகள்.

பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் பதக்கம், சான்றிதழ், நீதிபதிகள் கைப்பட எழுதிய பின்னூட்டம் வழங்கப்பட்டது. சிறப்பாகச் செய்தவர்களுக்குக் கேடயங்கள் வழங்கப்பட்டன. பகுதிவாரியாகச் சிறந்த ஆசான்களுக்கு 'தோராணாச்சார்யா' பட்டம் வழங்கப்பட்டது. ஜெயஸ்ரீ வரதராஜன், கீர்ணாவளி வித்யாசங்கர், ராஜேஸ்வரி பட், நிர்மலா ராஜசேகர், மதுரை சுந்தர், ஜெயசங்கர் பாலன் போன்ற ஆசான்களின் மாணவர்கள் மிகவும் சிறப்பாகப் பாடினர்.

அக். 10,11 தேதிகளில் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் 100 பேர் பங்கேற்றனர். சங்கீத கலாநிதி வித்வான். திருச்சி சங்கரன், க்ளீவ்லாண்ட். V.V. சுந்தரம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மேதைகள் கையெழுத்திட்ட சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் பணம் பரிசுகளாக வழங்கப்பட்டன. அவர்களுக்கு சபாக்களிலும் பாட வாய்ப்பு அளிக்கப்படும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உஷா ராமச்சந்திரனுடன் இணைந்து, பல்வேறு இடங்களில் பலர் இதன் வெற்றிக்காகப் பணியாற்றினர்.

ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி, யூ.கே., ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா, துபாய், கத்தார் ஆகிய இடங்களிலும் நடைபெறுகின்றது. உலக இறுதிச்சுற்று சென்னையில் நடைபெறும். வரும் ஆண்டுகளில் சங்கீத் சாம்ராட், உலகின் மூலை முடுக்கெல்லாம் இந்நிகழ்ச்சியைக் கொண்டு சென்று சிறந்த கலைஞர்களை உருவாக்க எண்ணியுள்ளது.

வெற்றி பெற்றவர்கள் பெயர்ப் பட்டியல்

Sangeeth Samraat 2015 USA Finals
Overall Winner Yuva SamraatKruthi Bhat
Classism AwardThanmaye Krishnamurthy
Overall InteractiveSudharshan Mohan

Yuva Samraat Senior1. Srividhya Balaji
2. Thanmayee K Krishnamurthy
3. Sudharshan Mohan
     S.R. Lakshmi
Special PrizesVidya Mulukutla
Vinod Natarajan
Best voiceVinod Sridharan
Sowmya Rachakonda

Yuva Samraat Junior1. Shradha ganesh
2. Thakshana srinathan
3. Shrihari bhaskaramurthy
Best Pallavi1. Sahana Prasanna
2. Apoorva Das
3. Shruti Santhanam
     Nandini Sridhar
Best Time Allotment and Variety in Pallavi1. Shruthi Ramesh
2. Akshaya Raman
3. Varshini Ramanathan
SpecialRanjani Ravindrabharathy
Suchita Raman
Best Child TalentPreethika Ashok

Interactive Session- Carnatic IQNandini Sridhar
Apoorva Das
Best voiceSantosh Sivakumar
Instrumental1. Shreyas Bharadwaj (flute)
2.
3. Shiam kannan (guitar), Adhvyte Sharma, Neeraj Chandrashekhar (violin duet)
Percussion1. Thayallan Srinathan
2. Arjun Ramachandran
3. Pranav Krishna Ramasubramanian
     Nikhil Murali
Best AccompanyingThayallan Srinathan
Arjun Ramachandran
Girls Percussionist1. Sathya Ramesh
Special PrizeMayan Sudharshan
Carnatic Premier League Group1. Blossoming lotus
2. Roswell rhythms
3. New Jersey Pancharatnam Group
     Sarvalaghu Percussion Carnatic Ensemble
Duo Vocal1. Sai sisters
2. Sree Varshini and Nitheyaa Sri

Bala Samraat Titles
Vocal – above 10 yrs1. Pranav Kikkeri
2. Rhea Rajesh
3. Ahi Ajayan
Special Prize - vocalRishab Ranganathan
Surya Ganesh
Maanasa Nandigam
Ananya Devnath
Vocal – 10 and below1. Sanika Pande
2. Prakrithi Jayanth
3. Mayuri Srivaths
Special PrizeSriranjani Haran
Sri Pradha Manikandan
Rasika Sivakumar
Harshil Nittala
Best VoiceSasanka SN

Interactive - Carnatic IQAhi Ajayan (overall winner)
Category awardsAnanya Devanta (above 10)
Vishaka Ashok (below 10)
Percussion - Mrudangam1. Srihari S.Raman
2. Naren Pullela
3. Keshave Shankar
4. Ashwath Karunakaram
Special PrizeVishaal Ganesh
Srihari Srinivasan
Instrumental (overall)1. Bhargav Tumkur
2. Rishab Ranganathan
3. Sanjay Suresh
Instrumental Special Third PrizeWhistle - Sasanka S.N.
Keyboard - Sarvagh Shrianandh
Instrumental Special PrizeSrinath Hariharan (violin)
Instrumental Interactive – Carnatic IQ1. Rishab Ranganathan
2. Sanjay Suresh
3. Bhargav Tumkur


உஷா ராமச்சந்திரன்,
டாலஸ், டெக்சஸ்;
தமிழில்: மீனாட்சி கணபதி

© TamilOnline.com