தெரியுமா?:சிலிக்கன் வேல்லியில் 'சில்லு'
இரா முருகன் எழுதிய 'சில்லு' என்ற வருங்காலத்தைக் களமாகக் கொண்ட சயன்ஸ் ஃபிக்‌ஷன் நாடகம் நவம்பர் 22ம் தேதி விரிகுடாப் பகுதி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. சென்னையில் நல்ல வரவேற்பைப் பெற்ற இதை தீபா ராமனானுஜம் இயக்கியுள்ளார். "சில்லு என்றால் Bio-Chip. சிலிக்கன் சில்லு. அந்தக் குறுநாடகத்தைப் படித்தவுடனே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என் ஆர்வத்தைப் பார்த்து இரா. முருகன் அதை முழுநீள நாடகமாக மாற்றிக்கொடுத்தார்" என்கிறார் தீபா. எதிர்காலம்பற்றிய அறிவியல் நாடகம் தமிழில் மேடையேறுவது இதுவே முதன்முறை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

சென்னையில் 'சில்லு' 15 லட்ச ரூபாயில் பிரம்மாண்டமாக மேடையேறியது. குறிப்பாக, இளவயதினர் மிகவும் ரசித்துப் பார்த்தனர். ஏன் இத்தனை செலவு? "எதிர்காலத்தில் நடக்கும் இந்தக் கதைக்கு, இப்போதிருக்கும் எந்தப் பொருளையும் பயன்படுத்த விரும்பவில்லை. திரைப்படக் கலை இயக்குனர் நண்பர் V. செல்வகுமார் இதற்கான மேடை வடிவமைப்புச் செய்தார். இதில் நாற்காலி முதல், சிறுசிறு பொருட்கள்வரை அனைத்துமே சில்லுவிற்கென்றே உருவாக்கப்பட்டன. 'விஸ்வரூபம்' புகழ் ப்ரீதிகாந்தன், 3 ரோபாட்டுகள் உட்பட, 25 கதாபாத்திரங்களுக்கும் பிரத்யேகமான உடைகள் தயார் செய்தார். "இந்த பிரம்மாண்டம் சாத்தியமானது தேனாண்டாள் ஃபிலிம்ஸ் கொடுத்த நிதி ஆதரவினால்தான்" என்பதையும் தீபா சொல்லத் தவறவில்லை.

ஏ.ஆர். ரகுமான் இசைப்பள்ளியில் பணிபுரிந்த, விரிகுடாப் பகுதியைச் சேர்ந்த கவிதா பாளிகா இசையமைக்கிறார். ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் விஜய் சேதுபதி சில்லு போஸ்டரை வெளியிட்டார். இந்த நாடகத்திற்காகத் தயாரித்த Motion Poster-ஐ முதலில் பார்த்து, கருத்துச்சொல்லி, வாழ்த்தினார் நடிகர் கமல்ஹாஸன்.
"சென்னையில் வெற்றிகரமாக மேடையேற்றிய போதும், நம் ஊரில், நண்பர்கள் முன்னிலையில், உள்ளூர் நடிகர்களைக் கொண்டு மேடையேற்றுவதில் இருக்கும் சந்தோஷத்தை விவரிக்க முடியாது" என்று குஷியாகச் சொல்கிறார் தீபா. எதிர்காலத்துக்குள் சில மணிநேரம் செலவழிக்க ரசிகர்களுக்குக் கசக்குமா என்ன!

நாள்: நவம்பர் 22, ஞாயிறு. நேரம்: 2:00 மணி மற்றும் 6:00 மணி
இடம்: ஓலோனி கல்லூரி ஜாக்சன் தியேட்டர், ஃப்ரீமான்ட்

இணையம்வழி சீட்டு வாங்க
வலைமனை: www.BharatiTamilSangam.org

தொலைபேசி:
ப்ரியா நவீன் - 510.393.9422
உஷா - 510.366.5214

முகநூல்:
www.facebook.com/ChilluThePlay
www.facebook.com/KreaCreations
www.facebook.com/bharattamilsangam

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com