தெரியுமா?: டாலஸ் தமிழ்மன்றம்
டாலஸ் நகரத்தில் 'டாலஸ் தமிழ் மன்றம்' அமைப்பைத் தமிழார்வலர்கள் உருவாக்கியுள்ளனர். இது லாபநோக்கற்ற, மதச்சார்பற்ற தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டாலஸ் மாநகரிலும் இந்தியாவிலும் தொண்டார்வம் உள்ள மக்களுடனும், சக தொண்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து உதவிக்கரம் நீட்டுதல், தமிழர் மொழி, கலாசாரத்தையும் மரபுகளையும் பேணிக்காத்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழருக்குக் குடிவரவு ஆலோசனை, வருகைதரும் பெற்றோருக்கு மருத்துவம் மற்றும் காப்பீடு, சமீபத்தில் இங்கே குடிவந்தோருக்குத் தேவையான தகவல்கள் (local realty help), பள்ளிகள் விபரம் (find school/after school help) போன்ற பல்வேறு தளங்களில் உதவிட முகாம்களையும், பயிற்சிப் பட்டறைகளையும், உதவித் தொலைபேசி எண்களையும் ஏற்பாடு செய்ய இந்தத் தமிழ்மன்றம் திட்டமிட்டுள்ளது.

சற்றே நீண்டநாள் திட்டமாக அனைத்து வசதிகள் கொண்ட சமுதாயக்கூடம் அமைத்தலும் உள்ளது.

விரிவான தகவல்களுக்கு
வலைமனை: www.dallastamilmanram.org
மின்னஞ்சல்: dallastamilmanram@gmail.com
முகநூல்: www.facebook.com/dallastamilmanram

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com