தெரியுமா?: அமெரிக்காவில் முன்னணி கிரிக்கெட் தாரகைகள்
சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்ன் உட்பட உலகின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் 'கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ்' 3 ஆட்டப் போட்டியில் பங்கேற்கப் போகிறார்கள். இந்த விளையாட்டுக்களின் விவரம்:

நவ. 7: நியூ யார்க் சிட்டியில் சிட்டி ஃபீல்டு அரங்கில் அமர்க்களமான தொடக்கவிழாவும் முதல் ஆட்டமும் நடக்கும்.
நவ. 11: ஹூஸ்டனில் மினிட் மெய்டு பார்க்கில் 2வது போட்டி நடக்கும்.
நவ. 14: லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள டாட்ஜர் ஸ்டேடியத்தில் 3வது போட்டியும், வெற்றியாளருக்குக் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கும்.

இந்தத் தொடர் மிக விறுவிறுப்பான T20 ஆட்டங்களாக இருக்கும். "Sachin's Blasters", "Warne's Warriors" என்னும் இரண்டு சூப்பர் அணிகளில் ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, முத்தையா முரளீதரன், வசீம் அக்ரம், ஜான்டி ரோட்ஸ், மைக்கல் வான் ஆகியோரும் இடம்பெறுவர்.

நுழைவுச் சீட்டுகள் வாங்க:
Citi Field (NYC): Mets.com/cricket
Minute Maid Park (Houston): Ticketmaster.com/event/3A004F3195293147
Dodger Stadium (Los Angeles): Dodgers.com/cricket
மேலும் விவரங்களுக்கு: CricketAllStarsLeague.com.

© TamilOnline.com