1) 3, 5, 8, 13, 22... வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
2) ஐந்து வருட முன்னால் லைலாவின் வயது அவளது மகனின் வயதைப்போல் ஐந்து மடங்கு. ஐந்து வருடங்களுக்குப் பின்னால் அவளது வயது, அவளது மகனின் வயதின் மூன்று மடங்கிலிருந்து எட்டு குறைவாக இருந்தது என்றால் லைலாவின் வயதென்ன, அவளது மகனின் வயதென்ன?
3) a,b,c,d,e என்ற ஐந்து சிறுவர்கள் ab, ac, ad... என்ற வரிசையில் இரண்டு இரண்டு பேராக எடை பார்த்தபோது 78, 72, 66, 64, 62, 60, 56, 52, 50 என்று எடை காட்டியது. a,b,c,d,e என்ற சிறுவர்களின் தனித்தனியான எடை அளவு என்னவாக இருக்கும்?
4) 289, 324, 361... வரிசையில் அடுத்து வரவேண்டிய எண் எது, ஏன்?
5) 8723, 3872, 2387, ..... விடுபட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது, ஏன்?
அரவிந்த்
விடைகள்1) அடுத்து வர வேண்டிய எண் = 39. ஒவ்வொரு எண்ணின் இரு மடங்கிலிருந்தும் 1, 2, 3 என வரிசையாகக் கழித்தால் வரும் எண்களின் வரிசையாக மேற்கண்டது அமைந்துள்ளது. 3*2 = 6 - 1 = 5, 5*2 = 10 - 2 = 8; 8*2 = 16 - 3 = 13; 13*2 = 26 - 4 = 22. இந்த வரிசையில் அடுத்து வர வேண்டியது = 22*2 = 44 - 5 = 39.
2) ஐந்து வருடங்களுக்கு முன்னால் லைலாவின் வயது = 5x; மகனின் வயது = x தற்போது லைலாவின் வயது = 5x + 5; மகனின் வயது = x + 5 ஐந்து வருடங்களுக்குப் பின்னால் லைலாவின் வயது = 5x + 10; மகனின் வயது = x + 10 ஐந்து வருடங்களுக்குப் பின்னால் லைலாவின் வயது, அவளது மகனின் வயதின் மூன்று மடங்கிலிருந்து எட்டு வயது குறைவாக இருக்கிறது என்றால் 5x + 10 + 8 = 3(x + 10) 5x + 18 = 3x + 30 5x - 3x = 30 - 18 2x = 12 x = 12 / 2 x = 6
லைலாவின் தற்போதைய வயது = 5x + 5 = 5(6) + 5 = 30 + 5 = 35 மகனின் வயது = x + 10 = 6 + 5 = 11 லைலாவின் தற்போதைய வயது = 35; அவள் மகனின் வயது = 11.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் லைலாவின் வயது = 35 - 5 = 30; மகனின் வயது = 11 - 5 = 6 (ஐந்து மடங்கு) ஐந்து வருடங்களுக்குப் பின்னால் லைலாவின் வயது = 35 + 5 = 40; மகனின் வயது = 11 + 5 = 16 (மகனின் வயதின் மூன்று மடங்கிலிருந்து எட்டு வயது குறைவு = 3*16 = 48 - 8 = 40)
3) a+b = 78 a+c = 72 a+d = 66 a+e = 64 b+c = 62 b+d = 60 b+e = 56 c+d = 52 c+e = 50 d + eயின் எடை நமக்குத் தெரியாது.
ஐந்து சிறுவர்களின் மொத்த எடை = 78 + 72 + 66 + 64 + 62 + 60 + 56 = 52 + 50 = 560.
a,b,c,d,e என்னும் ஐந்து சிறுவர்களில் ஒவ்வொருவரும் நான்குமுறை எடை பார்த்துள்ளனர்.
a+b+c+d+e = 560/4 = 140
e = (a+b+c+d+e) - (a+b) - (c+d) = 140 - 78 - 52 = 10 a+e = 64; a = 64 - e = 64 -10 = 54 a+b = 78 = b = 78 - a = 78 - 54 = 24 b+c = 62 = c = 62 - b = 62 - 24 = 38 c+d = 52 = d = 52 - c = 52 - 38 = 14
ஆக, a,b,c,d,e என்ற ஐந்து சிறுவர்களின் எடைகள் முறையே 54, 24, 38, 14, 10 ஆகும்.
4) அடுத்து வரவேண்டிய எண் = 400. 17 முதல் 20 வரை உள்ள எண்களின் வர்க்கமே வரிசையாக அமைந்துள்ளது. 172 = 289; 182 = 324; 192 = 361.. ஆக அடுத்து வரவேண்டியது = 202 = 400.
5) முதல் தொகுப்பு எண்ணின் இறுதி இலக்கம் அடுத்த தொகுப்பு எண்ணின் முதலாக வருமாறு வரிசை அமைந்துள்ளது. 8723 - இறுதி எண் 3 வரிசையில் முதலாகச் செல்ல 3872. அடுத்து 2387. ஆக வரிசையில் அடுத்து வரவேண்டியது = 7238. |