தேவையான பொருட்கள் நன்றாக மசித்த சாதம் - 1 கிண்ணம் கடலை மாவு - 1/4 கிண்ணம் பச்சை மிளகாய் - 4 அல்லது 5 வெங்காயம் (நறுக்கியது) - 1/4 கிண்ணம் மிளகு - 1 தேக்கரண்டி பச்சைப் பட்டாணி - 2 மேசைக்கரண்டி தேங்காய் (பல்பல்லாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை (நறுக்கியது) - சிறிதளவு இஞ்சி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிக்க நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை மசித்த சாதத்துடன் கடலை மாவு, வெங்காயம், தேங்காய், பச்சைமிளகாய், மிளகு, பட்டாணி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, நெய், உப்பு எல்லாம் சேர்த்து நீர்விட்டுப் பிசைந்து கொள்ளவும். சிறு சிறு போண்டாவாக உருட்டவும். எண்ணெய் காய்ந்தபின் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். கெச்சப் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் சூடாகச் சாப்பிட்டால் படுஜோர்.
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி |