சிகாகோ: 'பெருமாளே' நாடகம்
செப்டம்பர் 19, 2015 அன்று மகம் எண்டர்ப்ரைசஸும், CAIFAவின் நாடகக்குழு 'பெப்பரப்பே'யும் இணைந்து மதுவந்தி, சுரேஷ்வருடன் 'பெருமாளே' என்ற நகைச்சுவை நாடகத்தை ஹார்ப்பர் கல்லூரி கலையரங்கத்தில் நடத்தியது. விலாத்தெறிக்கும் இந்த நகைச்சுவை நாடகத்தில் முத்தாய்ப்பாக பிரார்த்தனை என்பதற்கான அழகான விளக்கம் கொடுக்கப்பட்டது.

ஆண்டாளாக மதுவந்தியும், கோவிந்தாக சுரேஷ்வரும் மற்றும் மகம் எண்டர்ப்ரைசஸின் நடிகர்களும் நடித்தனர். இவர்களுடன் பெப்பரப்பே நாடகக்குழுவிலிருந்து கார்த்திக் (நாரதர்), சுஜாதா (கஜலட்சுமி), ஸ்ரீராம் (சித்தர்/பெருமாள் பிச்சை), லக்ஷ்மிநாராயணன் (சில்க் சேட்டு, மேல படுத்த பெருமாள்), சுரேந்தர்பாபு (என்கவுண்டர் குமரேசன்), சேகர் (கலெக்‌ஷன் குமார், வெங்கடேசன்) பாத்திரங்களில் சக்கைப்போடு போட்டனர். மற்றும் ஆர்.ஜி. நாராயணன், கோகுலமுரளி, சந்திரா முரளி, ராம்ஜி ஆகியோரும் துணைப்பாத்திரங்களில் சிறப்புச் சேர்த்தனர்.

இதையொட்டி, "பெருமாளே" அல்லது "humor is a human thing" என்ற தலைப்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒவியப்போட்டி நடத்தப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களுக்கு சான்றிதழ்களை CAIFA டைரக்டர் ரவிக்குமார் வழங்கினார். வரவேற்புரையை நிவேதா சந்திரசேகரும், ஒருங்கிணைப்பை மாலதியும் சிறப்பாகச் செய்தனர்.

சேகர் சந்திரசேகர்,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com