TNF: CT ரிதம்ஸின் 'தாளலயா'
செப்டம்பர் 19, 2015 அன்று CT Rhythms இசைக்குழுவினர் 'தாளலயா' என்ற இசைவிருந்தை வழங்கியது. தமிழ்நாடு அறக்கட்டளையின் கனெக்டிகட் கிளை ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதி, அறக்கட்டளையின் 'அன்பாலயம்' என்ற மனநிலை குன்றிய சிறுவர் சிறுமியரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. 'சரிகம' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷணா மேனன், விஜய் சூப்பர் சிங்கரில் வெற்றிபெற்ற கிருஷ்ணன் ஸ்ரீதரன் இவர்களுடன் கனெக்டிகட்டைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்து நிகழ்ச்சியை வழங்கினர். பல மொழிகளில் பழைய, புதிய பாடல்கள் இசைக்கப்பட்டன.

இசைக் கலைஞர் திரு. சம்பத் நாரயணசுவாமி இதற்குப் பெருந்துணை புரிந்தார். இசை வெறும் பொழுதுபோக்கல்ல, அதன்மூலம் வாழ்க்கையை மாற்றமுடியும் என்பதை CT ரிதம்ஸ் குழுவினர் செயல்படுத்திக் காட்டினார்கள்.

டாக்டர். வரலட்சுமி நிரஞ்சன்,
ஹார்ட்ஃபோர்டு, கனெக்டிகட்

© TamilOnline.com