பிரபா


நாயகனாக விஜயராம் என்பவர் அறிமுகமாகும் படம் பிரபா. நாயகியாக சுவாசிகா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பல புதுமுகங்கள் நடிக்கின்றனர். இந்த திரில்லரின் பாடல்களை ரமேஷ் வைத்யா, மதிமாறன், ஸ்ரீதேவி, சபிதா, சொற்கோ ஆகியோர் எழுத எஸ்.ஜே. ஜனனி இசையமைக்கிறார். இயக்குநர் தரணியின் உதவியாளர் நந்தன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்குகிறார். "இது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படம். பொதுவாக பெண்கள் தங்கள் பிரச்சனைகளிலிருந்து வெளிவர மற்றவர் உதவியை எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாமல் பெண்களே போராடி வெற்றி பெறவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்தப் படம்" என்கிறார் நந்தன்.

அரவிந்த்

© TamilOnline.com