வித்தியாசமான கதைக்கரு கொண்ட படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டவர் அருண் வைத்தியநாதன். ஹாலிவுட் ஸ்டைலில் அவர் இயக்கும் புதியபடம் ஒன்றில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். அவருக்குப் போலீஸ் ஆஃபீசர் வேடம். "ஒரு சினிமா போலீசாக இல்லாமல் நிஜத்தில் ஒரு காவல் அதிகாரி எப்படி நிதானமாக, ஆழமாக ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்பாரோ அந்த ஆழத்தை அர்ஜுன் சாரின் கதாபாத்திரம் வெளிப்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் படமாக்கப்பட இருக்கும் இந்தப்படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் நடிப்பார்கள். சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் வகையில் தலைசிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர்" என்கிறார் அருண். அர்ஜுனுடன் பாபி சிம்ஹா, வரலட்சுமி ஆகியோர் இணைந்துள்ளனர். இருவருக்கும் துப்பறியும் நிபுணர்கள் வேடமாம். படத்துக்கு இனிமேத்தான் பெயர் வைக்கணுமாம்.
அரவிந்த் |