மதுரை மணிக்குறவன்


'மலையூர் மம்பட்டியான்' போல நிஜத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துப் படங்கள் உருவாகி உள்ளன. அந்த வரிசையில் வருகிறது மதுரை மணிக்குறவன். இதில் ஹரிகுமார் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மாதவி லதா நடிக்க, ரிஷிதா, பவித்ரா ஆகியோரும் இணை நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் சுமன், டெல்லி கணேஷ், எம்.எஸ். பாஸ்கர், கே.ஜி. காளையப்பன், சரவணன், அனுமோகன், போண்டாமணி, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்குக் கதை, திரைக்கதை வசனம் எழுதி ராஜரிஷி இயக்குகிறார். படத்தில் ஹரிகுமாருக்கு இரட்டை வேடம் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com