முந்திரிக்காடு


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சி. மகேந்திரனின் மகன் புகழ் நாயகனாக அறிமுகமாகும் படம் முந்திரிக்காடு. சுபப்ரியா நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மானின் இசைப்பள்ளி மாணவர் ஏ.கே. பிரியன் இசையமைக்க, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மு களஞ்சியம். "முந்திரிக்காட்டு மக்களின் வாழ்கை யதார்த்தத்தை இதில் பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளைநிலங்களில் சிந்தும் ஏழையின் வியர்வைத்துளி எப்படிப்பட்டது என்பதையும், அங்கே காதல் வயப்பட்ட இருவரின் காதலுக்கு ஊரே எதிர்ப்பு தெரிவிக்க, அந்தக் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதையும் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம்" என்கிறார் களஞ்சியம்.

அரவிந்த்

© TamilOnline.com