தேவையான பொருள்கள்: நெய் (அ) வெண்ணெய் - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி வெங்காயம் - பாதி பச்சை மிளகாய் - 1 பூண்டு - 2 கேரட் - 2 குடைமிளகாய் - 1 பச்சைப்பயறு (முளைகட்டியது) - 1 கிண்ணம் சோயா சாஸ் - 3 தேக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி சர்க்கரை - 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி தக்காளி கெட்சப் - 1 தேக்கரண்டி பாஸ்மதி ரைஸ் - 1 கிண்ணம் உப்பு - தேவைக்கேற்ப தண்ணீர் - 1 1/2 கிண்ணம் வெங்காயத் தாள் - அலங்கரிக்க
செய்முறை முளைகட்டிய பச்சைப்பயறைத் தண்ணீர்விட்டு வேகவைக்கவும். அரிசியை 20 நிமிடம் தண்ணிரில் ஊற வைத்துக் கழுவி தனியாக வைத்துக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கேரட், குடைமிளகாயைப் பொடியாக நறுக்கவும் . குக்கரில் அரிசியும், தண்ணீரும் விட்டு, மூன்று விசில் வரும்வரை வேக வைக்கவும். வாணலியில் நெய், எண்ணெய் விட்டுச் சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு நல்ல பொன்னிறமாக வதக்கவும். பின் பச்சைமிளகாய், கேரட், குடைமிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். பின் சோயா சாஸ், வினிகர், மிளகுத்தூள், தக்காளி கெட்சப், சர்க்கரை சேர்த்து நன்றாக வதக்கவும். மிதமான தீயில், வடித்த சாதம், முளைகட்டின பச்சைப்பயறு, உப்பு, வெங்காயத்தாள் போட்டு நன்றாகக் கிளறவும். சுவையான முளைகட்டின பச்சைப்பயறு ஃபிரைடு ரைஸ் தயார்.
காயத்ரி ரமணன், செயின்ட் லூயிஸ், மிசௌரி |