ரெட்மண்ட் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
13 ஜூன் மதியம் 2:30 மணிமுதல் மாலை 8:00 மணிவரை ரெட்மண்ட் தமிழ்ப்பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பின்னர் பல்வேறு வயது மாணாக்கர்கள் இனிய தமிழில் பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கிப் பெற்றோரையும் தன்னார்வ ஆசிரியர்களையும் ஆனந்தப்படுத்தினர். குழந்தைகள் ஆயிரமாயிரம் சொற்களை ஆங்கிலத்தில் பேசினாலும் தட்டுத்தடுமாறி வரும் தமிழ்ச் சொல்லைக் கேட்பதே இனிதிலும் இனிது. அதிலும் அவர்கள் தேர்ச்சிச் சான்றிதழையும் கோப்பையையும் பெற்றபோது அவர்களின் மகிழ்ச்சி எல்லைகளைக் கடந்தது. இறுதியில் தலைமையாசிரியர் நன்றியுரை கூறினார்.

ரெட்மண்ட் தமிழ்ப்பள்ளி 2009 முதல் தொண்டு நிறுவனமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 230 குழந்தைகள் தமிழ் கற்கிறார்கள். இப்பள்ளி கலிஃபோர்னியா தமிழ்க்கழகத்துடன் (CTA) இணைக்கப்பெற்றது. பள்ளியில் மழலையர் வகுப்பு (Pre K) முதல் 8ம் வகுப்புவரை, ஒவ்வொரு வாரமும் காலை 10:00 மணிமுதல் 11:30 மணிவரை பாடங்கள் நடத்தப்படுகின்றன. இது மற்ற அமெரிக்க அரசுப் பள்ளிகள் போல் செப்டம்பர் முதல் ஜூன் மாதம்வரை நடத்தப்படுகிறது. இந்த வருடம்முதல் ரெட்மண்ட் மற்றும் பெல்லவ்யு என இரண்டு இடங்களில் நடக்கவிருக்கிறது.

ரெட்மண்ட்: Old Redmond Schoolhouse Community Center, 16600 NE 80th St, Redmond, WA 98052
பெல்லவ்யூ: Bellevue Community College, 3000 Landerholm Cir SE, Bellevue, WA 98007
மேலும் விவரங்களுக்கு: www.redmondtamilschool.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com