மினசோட்டா: கோடை பிக்னிக்
ஆகஸ்ட் 22, 2015 அன்று மினசோட்டா மாகாணத்தின் ட்வின் சிட்டீஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கோடைத்திருவிழா கூட்டுவிருந்துடன் மினசோட்டா ஈகன் நகரத்திலுள்ள பிளாக் ஹாக் பூங்காவில் கொண்டாடப்பட்டது. சாக்குப்போட்டி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுவகைகள் எல்லையற்ற மகிழ்ச்சியூட்டின. இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் பங்கேற்று கோடை விருந்துலாவைச் சிறப்பித்தனர்.

ஷான் குத்தாலிங்கம்,
மினசோட்டா

© TamilOnline.com