மெட்ரோ


பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கும் படம் மெட்ரோ. உடன் சென்ட்ராயன், ஸ்ரீரிஷ், சத்யா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'ஆள்' படத்தை இயக்கிய அனந்த் கிருஷ்ணன் படத்தை இயக்குகிறார். உலகிலேயே தங்கம் அதிகம் புழங்கும் நாடு இந்தியா. தங்கம் எப்படி உருவாகிறது, எப்படி எடுக்கப்படுகிறது, எப்படி கடத்தப்படுகிறது, எப்படியெல்லாம் சமூக விரோதிகள் கைகளில் உலாவுகிறது என்பவற்றை மையமாக வைத்து உருவாகிறது மெட்ரோ. இசை, ஜோஹன். படத்தில் கதாநாயகி என்று தனியாக யாரும் இல்லையாம். தங்கமே தங்கம்!

அரவிந்த்

© TamilOnline.com