நரேன் பாலாஜி, தமீன் அன்சாரி, கார்த்திக், சங்கீதா ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகும் 'ஃபில்டர் காஃபி' படத்தை ராகவ் இயக்குகிறார். ராமசுப்பிரமணியன் இசையமைக்கிறார். இருவரும் புதுமுகங்களே! “தமிழ் பாரம்பரியத்தில் ஃபில்டர் காஃபி ஒரு தவிர்க்க முடியாத விஷயம். எல்லாவித விருந்துகளிலும் ஃபில்டர் காஃபிக்கு முக்கிய இடமுண்டு. வாழ்க்கையின் சந்தோஷமான தருணங்களை காஃபியோடு கொண்டாடுவதுபோல், இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் வேறொரு நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். அது என்ன என்பது சஸ்பென்ஸ். அதுதான் திரைக்கதையின் பலம்” என்கிறார் டைரக்டர். நடிகை லக்ஷ்மி மேனன் இப்படத்தில் ஒரு முக்கியமான பாடலைப் பாடியிருக்கிறாராம். ஸ்ட்ராங்கா இருக்கட்டும், சூடாவும்!
அரவிந்த் |