ஆடையிட்ட பாலினை ஊதி விலக்குவதுபோல எளிதல்ல உனது பிடிவாதத்தை விலக்குவது மஞ்சள் கலந்து வெந்து நிறமிழந்த கத்தரிக்காய் போல நிறம் மாறக்கூடியதில்லை உனது கற்பனைகள் தாளிக்கும்போது கடுகு வெடித்தடங்குவது போன்றதில்லை உன் புரிதல் குழப்பங்கள் பிள்ளையார் போல தொப்பை பளபளக்கும் இஞ்சியைப் பார்த்ததும் உன் நினைவு உனக்கான என்னை சமைத்துக் கொண்டிருக்கிறேன்.
லாவண்யா சுந்தரராஜன், பெங்களூரு |