பழம் புத்தகம்
எண்ணைய்ப் பிசுக்கேறிய
பழம்புத்தகமொன்று
சுலோகம் வாசிக்க
வசதியாய் இருந்தது

அநேகமாய் சிதலமடைந்துவிட்ட
புத்தகத்திற்கு மாற்றாய்
புதுப்புத்தகம்
தேடிக் கிடைத்தது

பழம்புத்தகத்தின் அனைத்தையும்
கூடவே அனேக விஷயங்களையும்
உள்ளடக்கியதாயினும்
பழம்புத்தகம் போலில்லை
புதுப்புத்தகம்.

லாவண்யா சுந்தரராஜன்,
பெங்களூரு

© TamilOnline.com