COMCAST வழங்கும் சலுகைகள்
குறைந்த வருவாயுள்ள 500,000 குடும்பங்களைச் சேர்ந்த 2 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் COMCAST துணையுடன் வீட்டில் டிஜிட்டல் இடைவெளியைக் கடந்துள்ளார்கள். COMCAST நிறுவனம் இணையதள வேகத்தை இரட்டிப்பாக்கியுள்ளது, கூடுதல் கட்டணமின்றி WiFi ரௌட்டர்களை வழங்குகிறது மற்றும் குறைந்த வருமானமுள்ள சீனியர் குடிமக்களுக்கு பைலட் திட்டத்தை அறிவித்துள்ளது

இந்தத் திட்டங்களின் ஆரம்பத்திலிருந்து COMCAST இணையவசதியில் 25 முக்கிய மேம்பாடுகளைச் செய்திருக்கிறது, 4 வருடங்களில் மூன்றாவது முறையாக வாடிக்கையாளர்களுக்கான வேகத்தை அதிகரித்துள்ளது. தற்போது வேகத்தை 10 Mbps வரை இரட்டிப்பாக்கியுள்ளது, இது ஒரே நேரத்தில் பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தப் போதுமானது. WiFi ரௌட்டர்களை வழங்குவதன் மூலம், டேப்லட் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்கள் உட்பட்டவற்றை அதிகக் கட்டணமின்றிப் பயன்படுத்த முடிகிறது. WiFi ரௌட்டர் பெற விரும்பும் வாடிக்கையாளர் தமக்கான அழைப்பு மையத்திடம் இலவசமாக ஒன்றை அனுப்புமாறு கேட்கலாம், அல்லது கூடுதல் கட்டணமில்லாமல் அதை நிறுவித்தரக் கோரலாம். புதிய வாடிக்கையாளர்களும் ஒரு WiFi ரௌட்டரைப் பெறும் வாய்ப்பு உள்ளது.

"குறைந்த வருமானமுள்ள முதியவர்களுக்கான பைலட் திட்டம், அவர்கள் இணையத்தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார் காம்காஸ்ட் நிறுவனத்தின் முதுநிலை துணைத்தலைவரான டேவிட் எல். கோஹன் கூறினார்.

Comcast வழங்கும் Internet Essentials என்பது நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவிரிவான அதிவேக இணையவலைத் திட்டமாகும். இது குறைந்த விலை இணையதள சேவையை $9.95 க்கு வழங்குகிறது வரி உண்டு; $150 க்கு ஒரு இணைய இணைப்புள்ள கணினி வாங்கும் வாய்ப்பைத் தருகிறது. இதன் மூலம் டிஜிட்டல் கல்வி நிதியுதவி செய்வதற்கு $240 மில்லியனுக்கும் அதிகமாகப் பணமாகவும் வேறு வகைகளிலும் முதலீடு செய்துள்ளது. இதன் பலன் லாபநோக்கற்ற சமூகக் கூட்டாளிகள் வாயிலாக ஏறக்குறைய 3.2 மில்லியன் மக்களைச் சென்றடைந்துள்ளது.

மேலதிகத் தகவலுக்கு, அல்லது திட்டத்துக்கு விண்ணப்பிக்க
வலைமனை: www.InternetEssentials.com
தொலைபேசி: 1-855-846-8376
குழும வலைமனை: www.Comcastcorporation.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com