இந்தியாவில் நல்ல நிலமோ, வீடோ வாங்க ஆசை இருந்தாலும், அதற்கான முயற்சிகள் நம்மை அசரவைக்கும்! இந்தியாவிற்குப் போய் வாங்கலாம் என்றால் நேரம் எடுக்கும். இப்படித் தொடங்கி பல பிரச்சினைகள். வரும் அக்டோபர் மாதம் IndiaProperty.com வழங்கும் "கிருஹப்ரவேசம்" இதை உங்களுக்கு மிக எளிதாக்கப் போகிறது. இந்தியாவின் இந்த மிகப்பெரிய பிராபர்டி ஷோ, அமெரிக்காவிற்கு வருகிறது! நீங்களே நேரடியாக விவரம் அறிந்துகொள்ளவும், சரியான முடிவெடுக்கவும் ஓர் அரிய வாய்ப்பு.
இந்த பிராபர்டி ஷோவில் இந்தியாவின் முன்னணி 40 பில்டர்களின் 100க்கும் மேற்பட்ட பிராஜெக்ட்கள் பங்கு பெறுகின்றன. ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், மஹாராஷ்டிரம், டெல்லி NCR, குஜராத், ராஜஸ்தான் மற்றும் பல மாநிலங்களின் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. நம்பிக்கையான செயல்பாடு மற்றும் CREDAI போன்ற அமைப்புகளுடன் தொடர்பு போன்றவற்றின் காரணமாக IndiaProperty.com மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்றுள்ளது. CREDAI அமைப்புடன் இணைந்து கோயமுத்தூரில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு 10,000க்கும் மேற்பட்டோர் வந்து குவிந்தனர்.
பட்ஜெட் சிறிதோ பெரிதோ, உங்கள் தேவைக்கேற்ப ஒன்று இங்கே கிடைக்கும். வீட்டு மனை, அபார்ட்மென்ட், தனி வில்லா என்று எல்லாம் இங்கு உண்டு. ரூ. 9 லட்சத்திலிருந்து 3 கோடி ரூபாய்வரை தேவையானதை, பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்க ஓர் அரிய வாய்ப்பு. மிகப்பெரிய பில்டர்களும் மிகப்பெரிய பிராஜெக்ட்களும் சேர்த்து ஒரே இடத்தில் பார்க்கமுடியுமே!
ரியல் எஸ்டேட் துறையில் வெற்றித்தடம் பதித்துவரும் IndiaProperty.com வீடு வாங்குவதை எளிமைப்படுத்துகிறது. உயர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் 'Virtual Site Visit Experience' என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தும் நீங்கள் வாங்க நினைக்கும் வீடு அல்லது மனையை முப்பரிமாணத்தில் பார்த்துவிட முடியும்! நிறுவனத்தின் CEO திரு. கணேஷ் வாசுதேவன், "வளர்ந்துவரும் தொழில்நுட்ப உதவியுடன் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள Tru View, Virtual Tour, 3D PanoX மற்றும் Discover போன்றவற்றால் ஆன்லைனில் வீடுதேடல் புதிய உயரங்களைத் தொட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்திய Virtual Site Visit Kiosks வாடிக்கையாளருக்குத் தாம் விரும்பும் வீட்டை நேரில் பார்த்து, தொட்டுணர்வது போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்" என்கிறார்.
சரியான ஆலோசனை வழங்க IndiaProperty.com வல்லுநர்கள் இருக்கிறார்கள். இதுவே சரியான வாய்ப்பு. கீழ்க்கண்ட இடங்களில் நடக்கும் எமது நிகழ்ச்சிக்கு வாருங்கள். உங்கள் கனவு இல்லத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடியாக அது அமையும்.
சான்ட கிளாரா, கலிஃபோர்னியா - அக்டோபர் 10, 11 பெல்லவ்யூ, வாஷிங்டன் - அக்டோபர் 17, 18 ஹூஸ்டன், டெக்சஸ் - அக்டோபர் 24, 25
பில்டர், ரியல் எஸ்டேட் ஏஜெண்ட், வீட்டு உரிமையாளர்கள் ஆகியோர் வீட்டை விற்கவோ வாடகைக்கு விடவோ விரும்பினால் எளிதான மார்கெட்டிங் வழிகளை IndiaProperty.com அளிக்கிறது. இவர்களது Assisted Property திட்டம், இந்தியாவிலேயே முதன்முதலாய் ஆன்லைனில் வீடுவாங்க உதவும் திட்டம். கிருஹப்பிரவேசம் இந்தியாவின் முதல் Virtual & Offline பிராபர்டி ஷோ ஆகும். 3D Virtual Tour, இந்தியாவின் முதல் ரியல் எஸ்டேட் மொபைல் app (Augmented reality based) போன்றவையும் இவர்களது புதிய முயற்சிகளாகும். 700000 பிராபர்டி விவரங்கள் உள்ள இந்த போர்ட்டலை, ஏறக்குறைய 5 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களும், 8000க்கும் மேற்பட்ட பில்டர்களும் ஏஜெண்ட்களும் பயன்படுத்துகிறார்கள்.
செய்திக்குறிப்பிலிருந்து |