தமிழகத்துக்கு 12 ஸ்மார்ட் நகரங்கள்
மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அண்மையில் நாடு முழுவதிலும் 98 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக அறிவித்தார். இதில் தமிழ்நாடு, சென்னை உட்பட 12 நகரங்களைப் பெற்றுள்ளது. திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர், வேலூர், சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி ஆகியவை இதில் அடங்கும். உத்திரப்பிரதேசம் (13 நகரங்கள்) அடுத்துத் தமிழ்நாடு அதிக எண்ணிக்கையில் பெற்றிருப்பதும், மாநில அரசு பரிந்துரைத்த அனைத்து நகரங்களும் தேர்வு பெற்றிருப்பதும் குறிப்பிடத் தக்கது.

இன்னும் இரண்டு நகரங்கள் பெயர் அறிவிக்கப்பட உள்ளது. தெரிந்தெடுக்கப்பட்ட நகரம் ஒவ்வொன்றும் முதலாண்டில் 200 கோடி ரூபாயும் அடுத்த மூன்று ஆண்டுகள் 100 கோடி வீதமும் மத்திய அரசின் நிதியுதவியைப் பெறும். இந்த நகரங்களில் உலகத்தரத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு ஏற்படுத்தும். சுத்தமான காற்று, சுகாதாரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் மேம்படுத்தப்படும். பொருளாதார வசதி, நிதி மற்றும் உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரச் சூழ்நிலை, வளங்கள் போன்றவற்றின் ஆதாரத்தில் இந்நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த 98 நகரங்களில் 24 மாநிலத் தலைநகரங்கள் அடங்கும். இவற்றில் 1 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 8 நகரங்கள் உள்ளன.



© TamilOnline.com