அக்டோபர் 2005: குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக

3. சிரத்தையுடன் கர்நாடக எல்லைகளுக்குட்பட்ட வனமா? (5)
6. பாதி வருடம் கலா ஆட்டத்தின் நளினம் சுலபமாகத் தோன்றும் (4)
7. உரக்க சொல்லி ஒருஸ்வரம் சேர்த்துப் பாவாடையுடன் காய் (4)
8. அறிஞர் வடித்த அப்பர் பாதி கலந்தவர் (6)
13. அவன் உள்ளே தலையின்றிக் கொடுத்த பக்கத்திலிருப்பவன் (6)
14. புலம்பி அரசு முடியவில்லை. வெற்றி தொடங்கவில்லை (4)
15. சாத்தியப்பட்ட அயன் தலைகொய்து வெளியே மடி (4)
16. தீவிரவாதிகளால் பேரம் பேசப்படும் பரிதாபத்திற்குரியவர் (5)

நெடுக்காக

1. நடராஜன் சேனை? (5)
2. உடைத்து நொறுக்கிய மாதர் பெருமையிழந்து கத்த குழப்பம் (5)
4. தாவணி கர்ப்பத்தை மறைக்கும் வியாபாரி (4)
5. சுனாமி நோயாளிகளுக்கு மருத்துவர் கொடுப்பது! (4)
9. கடைக்குட்டிப் பெண் சூழ்ந்த தழும்பு மாம்பழத்தில் மறைந்திருக்கும் (3)
10. ஆறாம் ஸ்வரத்துடன் அளவில் குறைவானவை கலைந்து போனவை (5)
11. காவிரியைத் தொடர்ந்த குற்றம் பின்பாதி தங்கத்தின் சாயம் (5)
12. மேல் நோக்கி வர, வெளியே தழுவு, காப்பாற்று (4)
13. தகவல் வெளியீடு கேட்பதற்கு திருமாலின் கரம் (4)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

செப்டம்பர் 2005 : குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக:5. ஏழுமலையான், 6. கைதி, 7. தேவாரம், 9. சிங்கம், 10. சகோதரா, 12. கடம்பா, 13. சாகா, 14. திரைமறைவில்
நெடுக்காக:1. வழு, 2. அலையும், 3. அன்னாசி, 4. பாதிக்கலாம், 8. வாஸ்கோடகாமா, 11. ராத்திரி, 12. கருமம், 15. விரி

© TamilOnline.com