தேவையான பொருட்கள் பால் - 3 கிண்ணம் முற்றிய பூசணித் துண்டுகள் (தோல் நீக்கியது) - 1 கிண்ணம் சர்க்கரை - 2 1/2 கிண்ணம் நெய் - 2 1/2 கிண்ணம் பாதாம்பருப்பு + முந்திரிப் பருப்பு - 1/2 கிண்ணம் கேசரிப் பவுடர் - சிறிதளவு ஏலப்பொடி - சிறிதளவு
செய்முறை பூசணித் துண்டுகளை ஒரு கிண்ணம் பால்விட்டுக் குக்கரில் வேகவைத்து ஆறியதும் மிக்சியில் அரைக்கவும். இரண்டு கிண்ணம் பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு சுருளக்காய்ச்சி, கெட்டியாக எடுத்துவைக்கவும். கொஞ்சம் முந்திரி, பாதாம் பருப்புகளை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு கெட்டிப் பாகு வரும்போது அரைத்து வைத்துள்ள பூசணிவிழுது, கெட்டிப்பால், முந்திரி, பாதாம் பொடி எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கிளறவும். கேசரிப் பவுடர் போடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது எடுத்து மிச்சமுள்ள முந்திரி, பாதாம் பருப்புகளை நெய்யில் வறுத்துப் போடவும். ஏலக்காய்ப் பொடி போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். இது சூப்பர் அல்வா.
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி |