முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு அமெரிக்க மக்களின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை இந்தியமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அறிஞரும், அரசியல்மேதகையுமான டாக்டர். கலாம், எளிய நிலையிலிருந்து இந்தியாவின் மிகத்திறம்பெற்ற தலைவர்களில் ஒருவராக உயர்ந்து தம் நாட்டிலும் வெளியேயும் புகழ்சேர்த்தார். வலுவான அமெரிக்க-இந்திய உறவுக்குக் குரல்கொடுத்தார். 1962ல் அமெரிக்கா வந்திருந்தபோது NASAவுடன் இந்தியாவின் விண்வெளி ஆய்வுக் கூட்டுறவை ஆழப்படுத்தவும் அவர் உழைத்தார். இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக அவரிருந்த காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய-அமெரிக்க உறவு வளர்ச்சிகண்டது. மிகச்சரியாகவே 'ஜனங்களின் ஜனாதிபதி' என்றழைக்கப்பட்ட டாக்டர் கலாமின் எளிமையும் பொதுச்சேவையில் காண்பித்த அர்ப்பணிப்பும் உலகெங்கிலும் இருந்த கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் அவரது அன்பர்களுக்கும் உற்சாகம் தருவனவாக அமைந்திருந்தன.
(அதிபர் செய்தியின் தமிழாக்கம்) |