சிகாகோ-விபா: குழந்தைகளுக்குச் சத்துணவு
ஜூன் 20, 2015 அன்று விபா, சிகாகோ செயல்மையம் (Vibha-Chicago Action Center) 'பசித்த எம் குழந்தைகட்கு உணவளி' (Feed My Starving Children) என்ற சேவையை நடத்தியது. இதில் வறிய, வலுக்குறைந்த குழந்தைகளுக்கெனத் தனிப்பட்ட சத்துணவைப் பைகளில் நிரப்பிக் கொடுத்தனர். இந்த உணவு உலகத்திலுள்ள எழுபது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விபாவின் முக்கிய நோக்கமான குழந்தைநலம் பேணுவதை பிரதிபலிப்பதாக இச்சேவை அமைந்தது.

இதில் பங்கேற்ற தன்னார்வலர்களான பெற்றோர்கள் தம் குழந்தைகளிடம் சேவை செய்யும் ஆர்வத்தைத் தூண்டும் வாய்ப்பாக இதனைப் பயன்படுத்தினர். விபா ஒரு லாபநோக்கற்ற தன்னார்வ அமைப்பு. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பல குழந்தைநலச் சேவைகளை செய்துவருகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் வித்யாரம்பம் மற்றும் சில கல்வியமைப்புகள் விபாவின் ஆதரவுடன் ஏழைக்குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் திட்டங்களில் பங்களிக்கின்றன. அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள பல நகரங்களிலும் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களுக்கு வசதியாக பல விபா செயல்மையங்கள் இயங்கி வருகின்றன. சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி மற்றும் அட்லாண்டா செயல்மையங்கள் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றிவருகின்றன.

விபா-சிகாகோவில் இணைந்து பணியாற்ற: e-mail: coordinator@chicago.vibha.org
வலைமனை: www.Vibha.org

ப்ரியா பாலசந்திரன்,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com