அரோரா: வறியோர்க்கு உணவு
ஜூலை 19, 2015 அன்று அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய மூன்றும் இணைந்து இவ்வாண்டின் நான்காவது 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை HESED HOUSE (659 S. River Road, Aurora, IL:60506) இல்லத்தில் மதியம் நிகழ்த்தினர்.

சிறார்கள் இரீனா, பிரின்டெட், ரித்திக், ராகுல், நித்தின், விசுவேசுவரன் ஆகியோர் தம் பெற்றோர்களுடனும், திருவாட்டி. அமுதா, கவிதா, இராசி, சசிபிரியா மற்றும் திருவாளர்கள். முத்துக்குமார், கணேசன், சாக்ரடீசு, பாபு, பொன்னுசாமி ஆகியோருடன் இப்பணியில் பங்கேற்றனர். திருக்குறள் அதிகாரங்கள் நான்கின் விளக்கமும், தமிழர் "இயற்கைக்கு நன்றி" என்பதை எங்ஙனம் காண்பிக்கின்றோம் என்பதன் விளக்கமும் கூறி, பழம்பெரும் வெளிநாட்டறிஞர்கள் தமிழர் குறித்துக் கூறியுள்ள சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்பு நூலும் அளிக்கப்பட்டது.

பயனுற்றோர் வாழ்த்துக்களை வழங்கி மகிழ்ந்தனர். செயல்பாட்டுக்கு உதவிய Hesed நிறுவனத்தின் அன்றைய நாள் உணவுப் பொறுப்பாளர் திரு. யூகோ அவர்கட்கு நிகழ்வு ஏற்பாடு செய்த அமைப்புக்கள் நன்றிகூறி நிகழ்ச்சியை முடித்தனர்.

வ.ச. பாபு,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com