ஆகஸ்டு 2015: வாசகர் கடிதம்
சாதாரண மனிதன் எல்லா உறுப்புகளும் இருந்து சாதிப்பது அதிசயமில்லை. பினோ ஸெஃபைன் பார்வையில்லாமல் வங்கியில் பணியாற்றி, தற்போது இந்திய வெளியுறவுப் பணி புரியும் வாய்ப்பை வென்ற சாதனையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இசையமைப்பாளர் பரத்வாஜ், இலங்கை அமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் நேர்காணல்களும் அருமை.

கே.ராகவன்,
பெங்களூரு, இந்தியா

*****
ஜூன் 'தென்றல்' இதழில் நீதிபதி ராஜராஜேஸ்வரி அவர்களது நேர்காணல் சுவைபட அமைந்திருந்தது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நீதி, சட்டத்தின் உதவி கிடைக்கவேண்டும் என்ற அவருடைய நோக்கம் போற்றத்தக்கது. "இருட்டைப் பழிப்பதை விட ஒரு விளக்கை ஏற்று" என்ற அவருடைய கருத்து உயர்ந்தது, புனிதமானது. "8 வயதுக் குழந்தைக்கு மகா பெரியவா அநுக்ரஹம் பண்ணியிருக்கா; 80 வயதான எனக்குக் கிடைக்காதா?" போன்ற நெஞ்சைத்தொடும் கருத்துக்களைத் தரும் சிந்துஜாவின் நேர்காணல் சிறப்பாக இருந்தது. ஏ.எஸ். ராகவனின் 'உம்மாச்சி' கதை உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.

முனை. சுப்ரமணியன் தியாகராஜன்,
சாரடோகா, கலிஃபோர்னியா

© TamilOnline.com