நைட் ஷோ


வித்தியாசமான கதையம்சமுள்ள படங்களைத் தரும் இயக்குநர் ஏ.எல். விஜய்யின் அடுத்தம் படம் 'நைட் ஷோ'. மலையாளத்தில் வெற்றிபெற்ற 'ஷட்டர்' படத்தின் ரீமேக் இது. பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டுக்கள் பெற்றது. இப்படத்தில் சத்யராஜும் மலையாள நடிகை அனுமோளும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். துபாயில் இருந்து மகளின் திருமணத்திற்காக ஊருக்கு வருகிறார் சத்யராஜ். அவர் ஒருநாள் குடித்துக் கொண்டிருக்கும்போது, நண்பர் ஒருவர் ஒரு பெண்ணை சத்யராஜின் அறைக்குள் விட்டுவிட்டு வெளியில் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுவிடுகிறார். இரண்டு நாள் கழித்துக் கதவு திறக்கப்படுகிறது. அதற்குள் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. நல்ல நண்பர் சார்!

அரவிந்த்

© TamilOnline.com