ஒரு தோழன் ஒரு தோழி


மனோ தீபன், மினிஷ் கிருஷ்ணா நாயகர்களாகவும், அஸ்திரா, அபிநிதா நாயகிகளாகவும் நடிக்கும் படம் ஒரு தோழன் ஒரு தோழி. தயாரிப்பு முதற்கொண்டு முழுக்க முழுக்கத் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பில் உருவாகி வருகிறது இப்படம். தமிழ்த் திரையுலகின் ஒரே பெண் படத்தொகுப்பாளரான கிருத்திகா இப்படத்தைத் தொகுக்கிறார். இவர், தயாரிப்பாளர்களில் ஒருவரும்கூட. பாடல்களை மோகன் ராய், பெ.மோகன் எழுத ஜெய் சுரேஷ் இசையமைக்கிறார். எழுதி, இயக்குகிறார் பெ. மோகன். "இது நிச்சயம் வழக்கமான படம் இல்லை. தமிழ் ரசிகர்களுக்கு மிக, மிக வித்தியாசமான ஒரு அனுபவத்தைத் தரப்போவது உறுதி" என்கிறார். தோள் கொடுப்பான் தோழன்!

அரவிந்த்

© TamilOnline.com