தேவையான பொருட்கள்
ரிகோட்டா சீஸ் - 1/2 கிண்ணம் பொடித்த சர்க்கரை - 1 மேசைக்கரண்டி தேன் - சிறிதளவு கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி பாதாம்பருப்புத் துண்டுகள் - 15 வனில்லா எஸன்ஸ் (vanilla essense) லவங்கப்பட்டைத் தூள் (cinnamon) - சிறிது (தேவையானால்)
செய்முறை
மேல் கூறிய எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து சாப்பிடவும்.
பின் குறிப்பு:
பாதாம்பருப்புத் துண்டுகள் தவிர எல்லா வற்றையும் மிக்ஸியில் மைய அரைத்துப் பின்னர் பாதாம்பருப்புத் துண்டுகள் கலந்து சாப்பிட ஐஸ்க்ரீம் போல இருக்கும்.
பொதுவான பின்குறிப்பு:
முழுக் கொழுப்பு உள்ள ரிகோட்டா சீஸ் (full fat ricotta cheese) வைத்துச் செய்தால் இந்த உணவு வகைகள் மிக ருசியாக இருக்கும். உடல் எடையில் கவனம் உள்ளவர்கள் பாதி கொழுப்பு நீக்கிய ரிகோட்டா சீஸ் (part-skim) பயன்படுத்திச் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |