பாஸந்தி
தேவையான பொருட்கள்

ரிகோட்டா சீஸ் - 1 கிண்ணம்
சர்க்கரை - 1/2 கிண்ணம்
கெட்டியான பால் - 1/4 கிண்ணம்
ஹா·ப் அண்ட் ஹா·ப் (half and half) - 1/2 கிண்ணம்
ஏலப்பொடி - சிறிதளவு
வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்புத் துண்டுகள் - 15

செய்முறை

ஓவனை 350 டிகிரி ·பாரன்ஹீட்டுக்குச் சூடு செய்யவும். ஓவனில் வைக்கும் கண்ணாடிப் பாத்திரத்தில் ரிகோட்டா சீஸ¤டன் 1/4 கிண்ணம் சர்க்கரையையும் கலந்து சூடு செய்த ஓவனில் வைத்து ஒரு aluminum foil-ஆல் மூடி அரை மணி பேக் (bake) செய்யவும். இதை முன்னதாகச் செய்து குளிர் சாதனப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.

அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் ஹா·ப் அண்ட் ஹா·ப்-ஐயும் பாலையும் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். பின்னர் இத்துடன் மீதி 1/4 கிண்ணம் சர்க்கரையைக் கலந்து அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பேக் செய்த ரிகோட்டா சீஸை எடுத்து இந்தக் கொதிக்கும் கலவையில் மெதுவாக விட்டுக் கலந்து இறக்கி ஏலப்பொடி, முந்திரி சேர்த்துக் குளிரவைத்தோ அல்லது சூடாகவோ சாப்பிடலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com