தேவையான பொருட்கள்
காரட் துறுவல் - 2 கிண்ணம் நெய் - 1/2 கிண்ணம் சர்க்கரை - 1/2 கிண்ணம் ரிகோட்டா சீஸ் - 1/4 கிண்ணம் பால் பவுடர் - 1/3 கிண்ணம் ஏலப்பொடி - சிறிதளவு வறுத்து ஒடித்த முந்திரிப் பருப்புத் துண்டங்கள் - 15
செய்முறை
இந்த ரிகோட்டா சீஸை பால் பவுடருடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, அது சூடானதும் காரட் துறுவலைப் போட்டு வதக்கி அதை நன்கு வேகவிட்டு மசித்து வைத்துக் கொள்ளவும். அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். இதை மைக்ரோவேவிலும் வேக வைத்துக் கொள்ளலாம்.
சர்க்கரையைச் சிறிது தண்ணீர் விட்டு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும். கம்பிப்பாகு ஆனதும் வெந்த காரட் மற்றும் சீஸ் கலவையைச் சேர்த்து அடி பிடிக்காமல் மிதமான தீயில் வைத்து அடிக்கடி கிளறவும். அல்வா பதம் வந்ததும் அதாவது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதம் வந்த பின்னர் ஏலப்பொடி, முந்திரி கலந்து அடுப்பில் இருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |