ராகி தயாரிப்புகள்
ராகி புளிஉப்புமா

தேவையான பொருட்கள்
ராகிமாவு - 1 1/2 கிண்ணம்
புளி - 1 எலுமிச்சை அளவு
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
மோர்மிளகாய் - 6 அல்லது 8
பச்சைமிளகாய் - 2
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1/2 கிண்ணம்

செய்முறை
புளியை ஊறவைத்துக் கரைத்து ராகி மாவில் ஊற்றி, உப்புப் போட்டுக் கொஞ்சம் தளரப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம், வெங்காயம், கறிவேப்பிலை எல்லாம் போட்டுச் சுருள வதக்கித் தாளித்து, பிசைந்து வைத்துள்ள மாவைப் போட்டுக் கைவிடாமல் கிளறவும். வேண்டுமானால் எண்ணெய் விட்டுக்கொள்ளவும். உதிருதிராக வரும்போது இறக்கி வைத்துச் சாப்பிடவும். இது சுவை மிக்க உப்புமா. சர்க்கரைநோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். புளிக்குப் பதில் புளித்த மோரில் கெட்டியாகப் பிசைந்தும் செய்யலாம். இதேபோல் சோளமாவு, அரிசிமாவிலும் செய்யலாம்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com