GATS: மகளிர்தினம்
மே 10, 2015 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கம் மகளிர்தினத்தைக் கொண்டாடியது. பெண்கள் மட்டுமே பங்கேற்று வழங்கிய இவ்விழா சிறப்பாக அமைந்தது. சங்கத் துணைத்தலைவர் திருமதி. லக்ஷ்மி தேசம், செயற்குழு மற்றும் நிர்வாகக்குழுவின் பெண் உறுப்பினர்கள், தன்னார்வ மகளிருடன் இணைந்து தரமான நிகழ்ச்சிகளை அளித்தனர். மரு. கலை செல்லம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கு முத்தாய்ப்பாக அமைந்தது. இவர் அமெரிக்கத் தமிழ் மருத்துவர் கூட்டமைப்பான ஆத்மாவின் (ATMA) ஜார்ஜியா மாநில கவர்னரென்பதால், தமிழ்ப் பெண்மருத்துவர்களை அழைத்துவந்து வெவ்வேறு தலைப்புகளில் பேச ஏற்பாடு செய்திருந்தார். "கருவறையிலிருந்து கல்லறைவரை" என்ற தலைப்பில் கலை செல்லம் அவர்கள் பெண்களுக்கு சிறுபருவமுதல் முதுமைவரை ஏற்படும் நோய்களை விரிவாக விளக்கினார்.

நடனங்கள், பாடல்கள், கோலப்போட்டி, சமையல் போட்டி, உடையலங்காரப் போட்டி, திடீர் பரிசுகள் எனப் பல்வேறு அம்சங்களுடன் மகளிர் தினத்தை அட்லாண்டா தமிழ்ப்பெண்கள் கொண்டாடினர். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

உமா பாபா,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com