பாரதி தமிழ்ச் சங்கம்: 'அன்னபூர்ணா'
மே 15, 2015 அன்று வீடற்றோருக்கு உணவு வழங்கும் 'அன்னபூர்ணா' நிகழ்ச்சியை பாரதி தமிழ்ச் சங்கம் அன்னபூர்ணா அமைப்புடன் இணைந்து நடத்தியது. சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் வசிக்கும் சமூகத்தினரின் தேவைகளுக்குத் தமிழமைப்புகள் உதவும் நோக்கத்துடன் இது வருடத்திற்கு நான்குமுறை நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி லோவ்ஸ் அண்ட் ஃபிஷஸில் (Loaves and fishes, Sanjose) சுமார் 150 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

இதற்கு உணவுப் பொருட்கள் வழங்கவும், நன்கொடை அளிக்கவும், நிகழ்ச்சியில் பங்கேற்று உதவவும் விரும்புபவர்கள் கீழ்க்கண்டவர்களைத் தொடர்பு கொள்ளவும்
அருட்செல்வன்: 916-316-6954
நித்யவதி சுந்தரேஷ்: 510-687-1950
மின்னஞ்சல்: foodforguest@gmail.com

நித்யவதி சுந்தரேஷ்

© TamilOnline.com