தேவையான பொருட்கள்
ரிகோட்டா சீஸ் - 1 கிண்ணம் சர்க்கரை - 1/3 கிண்ணம் நெய் - 1/3 கிண்ணம் பால் பவுடர் - 1/3 கிண்ணம் ஏலப்பொடி - சிறிதளவு வறுத்து ஒடித்த முந்திரிப்பருப்புத் துண்டங்கள் - 15
செய்முறை
ரிகோட்டா சீஸை பால் பவுடருடன் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரையைச் சிறிது தண்ணீர் விட்டு அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும்.
தளதள என்று கொதித்ததும் சீஸ் கலவையை அதில் போட்டுச் சிறிது சிறிதாக நெய்யை அவ்வப்போது விட்டுக் கொண்டே கைவிடாமல் கிளறவும். அல்வா பதம் வந்ததும் அதாவது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பதம் வந்ததும் ஏலப்பொடி, முந்திரி கலந்து அடுப்பில் இருந்து இறக்கி எடுத்து வைக்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |