உள்ளம் உள்ளவரை


பேய்ப்பட வரிசையில் மற்றுமொரு ஆவி-பேய்-பழிவாங்கல் திகில் படம் இது. சங்கர் நாயகனாகவும், மீனு கார்த்திகா, ப்ரீத்தி, அங்கனா ராய், காம்னா சிங் ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் மதன் பாப், கஞ்சா கருப்பு, சித்ரா லெட்சுமணன், பரவை முனியம்மா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி, இன்னொரு பெண்ணின் உடம்பில் புகுந்துகொண்டு, கொலை செய்தவர்களைப் பழிவாங்குவது படத்தின் கதை. தயாரிப்பாளர்களே வில்லன்களாக நடிக்கிறார்கள் என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com