54321


அரவிந்த் நாயகனாகவும் பவித்ரா நாயகியாகவும் நடிக்கும் படம் 54321. கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராகவேந்திர பிரசாத் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் ரோகிணி, சபரி, ரவி ராகவேந்தர், பசங்க சிவகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நா. முத்துக்குமார் பாடல்களை எழுத, ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். "5 முக்கிய கதாபாத்திரங்கள், 4 பேரின் வாழ்க்கை, 3 கொலைகள், 2 மணிநேர அவகாசம், 1 பழிவாங்கும் நிகழ்ச்சி" என்று தலைப்புக்கும் கதைக்கும் உள்ள தொடர்பை விளக்கும் இயக்குநர் 'இரண்டு மணி நேரப் படத்தில் விறுவிறுப்பான காட்சிகள் நிறைய. இதுவரை த்ரில்லர் படங்களில் காட்சிப்படுத்தாத வடிவத்தை முயற்சி செய்திருக்கிறோம்" என்கிறார். ஆவலோடு காத்திருக்கிறோம்.

அரவிந்த்

© TamilOnline.com