இன்பா, ட்விங்கிள், லில்லி (இட்லி!) என்ற மூன்று பாட்டிகள், தங்கள் பேத்திகளின் பிரச்சனைகளை எப்படித் தீர்க்கிறார்கள் என்பதைச் சொல்கிறது இந்தப் படம். பாட்டிகளாக கல்பனா, கோவை சரளா, சரண்யா நடிக்க பேத்தியாக அஸ்கிதா, நடிக்கிறார். முக்கிய வேடங்களில் அனுகிருஷ்ணா, மனோபாலா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், சுவாமிநாதன், இமான் அண்ணாச்சி, லொள்ளுசபா மனோகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: தரண். எழுதி இயக்குகிறார் வித்யாதரன். "பாட்டிகளுக்கும், கதைகளுக்கும் மரபுவழித் தொடர்பு உண்டு. நம்நாட்டுச் சூழலில் கதைகள் எல்லாமே பாட்டிகள் வழியேதான் அடுத்த தலைமுறைக்குப் போகின்றன. பிரச்சனையில் சிக்கிய பேத்தியை மூன்று பாட்டிகள் சேர்ந்து எப்படி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீட்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை" என்கிறார் இயக்குனர். ஹைடெக் பாட்டிகளோ!
அரவிந்த் |