விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம்
கடந்த ஜூலை 8ம் தேதி சனிக்கிழமை மாலைப் பொழுதில் சன்னிவேல் சனாதன தர்மசந்திர கோவிலில் விக்ரம் பிரகாஷின் கர்நாடக இசை அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 400க்கும் மேற்பட்டோ ர் கலந்து கொண்டு ரசித்தனர்.

17வயதே நிரம்பிய விக்ரம் ஸ்ரீமதி ஜெயஸ்ரீ வரதராஜன் அவர்களின் ராமலலித் கலாமந்திர் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்னும் இசைப்பள்ளியில் பயிற்சி பெற்று அந்தப் பள்ளியின் எல்லா விழாக்களில் பங்கு பெற்றுள்ளார். தவிர, இப்பள்ளியின் விஜயதசமி ஆண்டு விழாக்களிலும், பத்ரிகாச்ரமம், Concord மற்றும் Livermore கோவில்களிலும் மேடையேறி பாட விக்ரமிற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

அன்றைய நிகழ்ச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்கள் இயற்றிய 'வனஜாக்ஷி' (கல்யாணி ராகம் - ஆதிதாளம்) என்கிற வர்ணத்துடன் துவங்கியது. தொடர்ந்து முத்துஸ்வாமி தீட்சிதரின் 'வாதாபி கணபதிம்' (ஹம்சத்வனி - ஆதி), பூசிரிபைஜய ஸ்ரீவரதராஜன் இயற்றிய 'ஜய ஜய ஜய குரு' (நடராகம் - ஆதி தாளம்) பாபநாசம் சிவன் அவர்களின் ''என்ன தவம் செய்தனை (காபிராகம் - ஆதிதாளம்) தியாகராஜ சுவாமிகளின் 'துளசி தள' (மாயா மாளவகெளளராகம் - ரூபக தாளம்) நாராயணீத்திலிருந்து லலிதாதாஸ் இயற்றிய ராக பெளளியில் ஒரு பகுதியும், ஹமஸ் நந்தி தாளம் ரூபகத்தில் 'பவள குரு' என்கிற மற்றொரு பகுதியும், விஷ்ணு சகஸ்ர நாமத்திலிருந்து சிந்து பைரவி ராகத்தில் ஒரு பகுதியும், புரந்தரதாசர் இயற்றிய 'வெங்கடாசல நிலையம்' பாடலையும், கடைசியாக ஑அரியக்குடி ராமனுஜர் இயற்றிய தில்லானா வையும் பாடி மங்களத்துடன் பாடகர் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

எல்லா பாடல்களும் பாடகரின் இஷ்ட தெய்வமான பகவான் கிருஷ்ணன் பெயரில் அமைந்தது குறிப்பிடத்தக்கது. குருவாயூரப்பன் பெயரில் 'அக்ரேபச்யாமி' என்கிற ஸ்லோகம் பாடும் பொழுது, விக்ரம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டாலும் மேடையில் பல நிகழ்ச்சிகளை நடத்தி பழகியவர் போல சமாளித்துக் கொண்டு நிகழ்ச்சியை முடித்த விதம் பாராட்டுக்குரியது.

வயலினில் ஆசிரியையின் மகள் ரங்கநாயகி வரதராஜன் அவர்களும், மிருதங்கத்தில் பாடகரின் பள்ளி நண்பர் 17 வயதே நிரம்பியுள்ள அர்ஜுனன் ஹரிஹரனும் தம்தம் திறமைகளை காட்டி நிகழ்ச்சியை மெருகூட்டினர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த இசை அரங்கேற்றம் எல்லோராலும் தொடர்ந்து கைதட்டல்களுடன் ஊக்குவிக்கப் பட்டது. சிறந்த பாவத்துடனும், வார்த்தை களின் பொருள் அறிந்தும் விக்ரம் மனமுருகி பாடியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நாட்டிலேயே பிறந்து இங்கேயே வளர்ந்துள்ள விக்ரமின் பெற்றோர்கள் தக்ஷிண பாரதநாட்டை சார்ந்தவர்கள் ஆவார்கள். எனவே மகனுக்கு பாரதநாட்டு கலாச்சாரம், மொழி மற்றும் பழக்க வழக்கங்களை கற்றுத் தர அவர்கள் தவறவில்லை. எனவே, தமிழ் மற்றும் பாரத நாட்டு மொழிகளின் உச்சாரணம் தெள்ள தெளிவாக ஒலித்தது. இதற்கு விக்ரமின் பெற்றோர்களும் சரி, சின்மயா நிறுவனமும் சரி ஆசிரியை ஜெயஸ்ரீ வரதராஜனும் சரி பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பள்ளியில் பயிலும் போதே ஆறு ஆண்டுகள் celloவில் ஆங்கில இசைபயிற்சி, மற்றும் பல்வேறு தேர்வுகளில் வெற்றி, சின்மயா நிறுவனத்தின் பாலவிஹார்/யுவ கேந்திர வகுப்புகளில் 12 ஆண்டு பயிற்சிக்கு பிறகு கடந்த நாலு ஆண்டுகளாக சிறுவர்களுக்கு வகுப்புகள் நடத்துகிறார். தவிர டென்னிஸ் விளையாட்டிலும் தான் படித்த உயர்நிலைப் பள்ளியில் நிறைய விருதுகளும் பெற்று தந்திருக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்த பின் விக்ரமின் ஆசிரியை கோவில் செயலாளர் மற்றும் பெரியோர்கள் அவரை புகழாரம் சார்த்தியும், பொன்னாடை போர்த்தியும் கெளரவித்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் அருமையான சுவையான விருந்து அளிக்கப்பட்டது.

சு. சுப்பிரமணியம்

© TamilOnline.com