ரஜினி நடிக்கும் புதிய படம்
ரஜினிகாந்த் புதியபடம் ஒன்றில் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது. அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை இயக்கிய பா. ரஞ்சித் இதை இயக்குகிறார். கபிலன், உமா தேவி, கானா பாலா ஆகியோர் பாடல்களை எழுத சந்தோஷ் நாராயண் இசையமைக்கிறார். தாணு தயாரிக்கிறார். மலேசியா துவங்கி தாய்லாந்து, ஹாங்காக், சென்னையில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்கும். படத்தில் ரஜினிக்கு தாதா வேடம் என்றும் வடிவேலு நடிக்கக்கூடும் என்றும் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

S

அரவிந்த்

© TamilOnline.com