கணினியில் தமிழ் எழுத குறள் தமிழ்ச்செயலி
குறள் தமிழ்ச்செயலியைப் பயன்படுத்திக் கணினியில் தமிழை நேரடியாக உள்ளீடு செய்யலாம். இதனைக் கொண்டு MS ஆஃபீஸ், ஸ்டார் ஆஃபீஸ், கூகுளின் டாக்ஸ், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர், கூகுள் குரோம், யாஹூ மெயில், ஃபேஸ்புக், அடோபி தொகுப்புகள் ஆகியவற்றில் தமிழில் எழுதலாம். இத்துடன் ஃபேஸ்புக் மெசஞ்சர், யாஹூ மெசஞ்ஜர், கூகுள் டாக் ஆகியவற்றில் தமிழிலேயே அரட்டை அடிக்கலாம்.

யுனிகோட் தமிழில் மின்னஞ்சல்களையும் பரிமாறிக்கொள்ள முடியும். தமிழ் வழியாகவே இணையத்தில் யூனிகோடு தமிழில் உள்ளவற்றைத் தேடவும் முடியும். குறள் செயலியை kural.kuralsoft.com என்ற வலைப்பக்கத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளலாம். அதற்கான வழிமுறையும் அதே வலைப்பக்கத்தில் உள்ளது.© TamilOnline.com