தோல்கேன்சருக்கு சூரியன் காரணமல்ல!
20ம் நூற்றாண்டில் மக்களை சூரியனிடம் இருந்து காப்பாற்றப் பல களிம்புக் கம்பெனிகள் தோன்றின. இவர்களின் சன்ஸ்க்ரீன் லோஷனைத் தடவிக்கொண்டு வெயிலில் நடந்தால் தோல்கேன்சர் வராது எனவும் நேரடி வெய்யில் தோலில் பட்டால் தோல்கேன்சர் வரும் எனவும் சொன்னார்கள். சுமார் 400 கோடி ஆண்டுகளாக உலகத்து உயிர்களை எல்லாம் தோற்றுவித்து, உணவளித்து, காத்துவரும் அன்னதாதாவான சூரியனைக் கண்டு 20ம் நூற்றாண்டில் மக்கள் மிரண்டுபோய், அதனால் தோல்கேன்சர் வரும் எனப் பயந்து இந்தக் களிம்புகளை வாங்கிப் பூசிக்கொள்ளவும், வெளியே போகாமல் வீட்டுக்குள் உட்காரவும் ஆரம்பித்தார்கள்.

வேடிக்கை என்னவென்றால் இதுநாள்வரை சூரியவெளிச்சம் உடலில் படுவதுதான் தோல்கேன்சருக்குக் காரணம் என எந்த ஆய்வுமே நிரூபித்ததில்லை. புற ஊதா (அல்ட்ராவயலட்) கதிரை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். இந்தக் கதிர் உடலில் பட்டால் தோல்கேன்சர் வரும், சூரியவெளிச்சத்தில் அல்ட்ராவயலட் கதிர் இருக்கிறது. முடிந்ததா கதை?

ஆனால் நேரடியாகச் சூரியவெளிச்சத்தையும், தோல்கேன்சரையும் தொடர்புபடுத்தும் ஆய்வு ஒன்றாவது உள்ளதா என்றால் இல்லை. தோல்கேன்சர் வரும் பகுதிகள் எல்லாமே சூரியவெளிச்சம் படாத பகுதிகள்தாம். சூரியனுக்கு பயந்து வெளியே போகாமல் இருப்பவர்களுக்குத்தான் தோல்கேன்சர் பெருமளவில் வருகிறது. சூரியன் அதிகம் எட்டிபார்க்காத பனிநாடுகளில்தான் தோல்கேன்சரும் அதிகம். வருடம் முழுக்க வெயிலாக இருக்கும் நாடுகளில் தோல்கேன்சர் விகிதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம்.

புள்ளிவிவரப்படி பார்த்தால் சன்ஸ்க்ரீன் போடுபவர்கள், உடலில் கண்ட, கண்ட க்ரீம்களை தேய்ப்பவர்கள், சூரிய வெளிச்சம் படாமல் இருப்பவர்கள் இவர்களுக்கே தோல்கேன்சர் அதிகம் தாக்குவதாகத் தெரிகிறது. பகல் வெய்யிலில் உலாவும் எந்த மிருகத்துக்கும் தோல்கேன்சர் கிடையாது. குழந்தைக்கு தாயின் அணைப்பால் மாரடைப்பு வரும் என்பதும் சூரியக்கதிர் நம்மைத் தொடுவதால் கேன்சர் வரும் என்பதும் ஒன்றே

சூரிய ஒளியில் வைடமின் டி இருக்கிறதென்பது மட்டுமல்லை. அதுவே வைரஸ் மற்றும் கிருமிகளை விரட்டியடிக்கும் ஆற்றல்கொண்டது. உடலில் சிர்கேடியன் கடிகாரத்தைச் சரிப்படுத்தி பகல், இரவு, பசி, தூக்கம் முதலான உணர்வுகளைத் தூண்டும் சக்திகொண்டது. மகிழ்ச்சியைத் தோன்றவைத்து மனஅழுத்தத்தைத் துரத்தும் ஆற்றல்கொண்டது.

ஒரு களிம்பை விற்கச் சூரியன்மேல் கேன்சர் பழி சுமத்தியவர்களை நினைத்தால் ஆயாசமாக வருகிறது. வெளியே செல்லுங்கள். அவனது கருணை வெள்ளத்தில் குளியுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.

செல்வன்,
கிரீன்பே, விஸ்கான்சின்

© TamilOnline.com