மின்லாக்கர்
இந்திய அரசின் செய்தித் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை DIGILocker என்ற வசதியை அமைத்துக்கொடுத்துள்ளது. ஆதார் எண் உள்ளவர்கள் தமது மின் ஆவணங்கள், மற்றும் அரசுத்துறைகளால் அந்த ஆவணங்களுக்கு வழங்கப்படும் யூனிஃபார்ம் ரிசோர்ஸ் ஐடெண்டிஃபையர் (URI) ஆகியவற்றை இதில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். தவிர மின் கையொப்பமிடும் (e-Sign) வசதியும் இதன் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது. எல்லா மின் ஆவணங்களிலும் டிஜிடல் கையொப்பமிட இது பயனாகும். இதை எப்படிப் பயன்படுத்துவதை என்பதை அறிய: digitallocker.gov.in© TamilOnline.com