நியூ ஜெர்சி: முத்தமிழ் ஈகை விழா
மே 2, 2015 அன்று நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம், தமிழ் நாடு அறக்கட்டளையின் நியூ ஜெர்சி கிளை மற்றும் ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் நாடகக் குழுவினர் இணைந்து தமிழ்ப் புத்தாண்டு விழாவை முத்தமிழ் மற்றும் ஈகை விழாவாகக் கொண்டாடினர். கோல்ட்ஸ்நெக் நகரில் நடந்த இவ்விழாவில் 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தேவாரம், திருவாசகம், நாட்டுப்புறப் பாடல்கள் முதல் மெல்லிசைவரை இசை, வீரம், விவேகம், தியாகம் என்ற தலைப்பில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 22 வருடங்களாக ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் குழுவினர் ஆண்டுதோறும் வழங்கிவரும் நாடகவிருந்து இந்த வருடம் 'சூப்பர் குடும்பம்' நாடகமாகத் தொடர்ந்தது.

விழாவில் திரட்டப்பட்ட நிதியை சீர்காழியில் 'அன்பாலயம்' அமைப்பிலுள்ள மனவளர்ச்சிகுன்றிய குழந்தைகளின் நலனுக்கு வழங்கவிருப்பதாக நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத் தலைவி உஷா கிருஷ்ணகுமார் அறிவித்தார். தமிழ் நாடு அறக்கட்டளையின் முயற்சிகளுக்குத் தொடர்ந்து உதவிவரும் ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் நிறுவனர் ரமணியையும், வேதாரண்யத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்திற்கு 50,000 டாலரைத் தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் வழங்கியுள்ள தமிழ்ச் சங்கத்தையும், அறக்கட்டளையின் துணைத்தலைவர் முனைவர் சோமலெ சோமசுந்தரம், நியூஜெர்ஸி TNF கிளைத்தலைவர் சுப்பு கணேசன் ஆகியோர், பாராட்டினர்.

சோமலெ சோமசுந்தரம்,
நியூஜெர்ஸி

© TamilOnline.com