இது என்ன மாயம்


விக்ரம் பிரபு நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடிக்கும் படம் 'இது என்ன மாயம்'. நாஸர், நவ்தீப், அம்பிகா, காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலுக்கு ஜே போடும் இப்படத்திற்கு இசை ஜி.வி. பிரகாஷ் குமார். இயக்கம் : ஏ.எல்.விஜய். இப்படம் பற்றி இயக்குநர் விஜய், "காதல் ஒரு உணர்வுபூர்வமான விஷயம். அது யாருக்கு வருகிறது..அவர்களுக்கு அது எந்தக் காலகட்டத்தில் வருகிறது என்பதுதான் காதலின் மகத்துவம். பொருள்தேடும் வயதில் நாம் நினைக்கமறந்த பழைய நாட்களையும், நண்பர்களின் நேசத்தையும் இந்தப் படம் நினைவுபடுத்தும்' என்கிறார். அடடா.. அடடா... இதுதானே வாழ்க்கையின் மாயம்!

அரவிந்த்

© TamilOnline.com